தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தலைகீழாக மாறும் என்றும், கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதில் சிலவற்றில் காங்கிரஸ் கட்சி 106 முதல் 120 இடங்கள் கிடைக்கும் எனவும், பா.ஜ., 78 முதல் 92 இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக பேசியுள்ள பா.ஜ.க,வை சேர்ந்த கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, ‛கடந்த தேர்தலின்போது பா.ஜ.,வுக்கு 80 இடங்களும், காங்கிரஸ{க்கு 107 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கணித்திருந்தனர். ஆனால் அது தலைகீழாக மாறியது… எங்கள் கள நிலவரங்களின் அடிப்படையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், நாங்கள் பெரும்பான்மை பெறுவோம்’ என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More