Mnadu News

கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.315 அதிகரிப்பு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்.

டெல்லியில் பிரதமர் மோடித் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2023-24 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத மிக உயர்ந்த கொள்முதல் விலையை அதாவது குவிண்டாலுக்கு 315 ரூபாய் அதிகரித்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதனால், 5 கோடி கரும்பு விவசாயிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும், சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவர் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends