Mnadu News

கரூரில் கழிவு நீர் தொட்டியில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிப்பு

கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் அடங்கும் முன் அதே தொட்டியில், மேலும் ஒரு தொழிலாளரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மணவாசி அடுத்த சின்னமலை பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் (36) என்பது தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கழிவு நீர் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share this post with your friends