கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மூன்று நாள் சர்வதேச முருங்கை கண்காட்சியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், குறு சிறு தொழில்த்துறை அமைச்சர் அன்பரசன் , மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி, துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் நூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு முருங்கை இலையால் உருவாக்கப்பட்ட தின்பண்டங்கள், ஐஸ்கிரீம், ஜூஸ், முருங்கை இலை நூடுல்ஸ், முருங்கை எண்ணெய் ஆகியவைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பறவையிட்டனர்.