கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அம்மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட்டை முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று (பிப்.,17) தாக்கல் செய்தார். அதில், கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் ராமர் கோயில் கட்டப்படும் என அறிவித்துள்ளார். அதோடு, அடுத்த 2 ஆண்டுகளில் கோயில்கள் மற்றும் மடங்கள் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் ‛மக்கால பஸ்’ என்ற பெயரில் புதிய பேருந்து திட்டம் அறிமுகம்.அக்னிவீர் திட்டத்தின்கீழ் சேர பட்டியலின இளைஞர்கள் 10 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி.கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்த மக்களின் வசதிக்காக தொழில்வரி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.நடப்பாண்டில் 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More