Mnadu News

கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கும்: ஸ்மிருதி மத்திய அமைச்சர் இரானி கணிப்பு.

கர்நாடக தேர்தலையொட்டி மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருந்தி இரானி பெங்களூருவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இந்த சூழலில்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஸ்மிருந்தி இரானி;, ”காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்துக்களை வெறுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பஜ்ரங் தள அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்புடன் ஒப்பீடு செய்ததன் மூலம் ஹனுமான் பக்தர்களை அக்கட்சி அவமதித்துள்ளது.ஜெய் பஜ்ரங் பலி கோஷமிட்டால் கூட தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறது. இதற்கு காங்கிரஸ் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோல்வி அடையும். பாஜக ஆட்சி அமைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More