கர்நாடக நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய காங்கிரஸின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தத் தேர்தலில் பாஜக, இது பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு என்று கூறி பிரச்சாரம் செய்தது. அதனால், கர்நாடகாவில் இருந்துவரும் நிலவரங்கள் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில், உணவு பாதுகாப்பு, விலையேற்றம், விவசாயிகள் பிரச்சினை, மின்சார விநியோகம், வேலையின்மை, ஊழல் போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை முன்வைத்தது. ஆனால், பிரதமர் மோடியோ மக்களிடையே பிரிவினைவாதத்தை புகுத்தினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...
Read More