Mnadu News

கர்நாடகாவில் அமைகிறது ஐபோன் தொழிற்சாலை: மத்தியமைச்சர், முதலமைச்சர் தகவல்.

கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முதல் அமைச்சர்; பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெங்களூரு புறநகரில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. ஆப்பிள் போன்கள் தயாரிக்க அமைக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். உள்ளூரில் உற்பத்தியை துவக்க, இந்த தொழிற்சாலையில் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தில் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் ஆப்பிள் உதிரிபாகங்களையும் தயாரிக்கவும், தனது மற்றுமொரு தயாரிப்பான மின்னணு வாகனங்களுக்கான உதிரி பாகங்களையும் இங்கு தயாரிக்க பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தொழிற்சாலை அமையும் இடத்தை பார்வையிட வந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் குழுவினர் கூறுகையில், சர்வதேச நிறுவனங்களின் முதன்மையான தேர்வாக பெங்களூரு நகரம் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது” என தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.பாக்ஸ்கான் நிறுவனம், ஏற்கனவே, தமிழகத்தில் தொழிற்சாலை அமைத்து ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends