கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் நீர் திறப்பு காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 992 கன அடியிலிருந்து வினாடிக்கு 1223 கன அடியாக அதிகரித்துள்ளது.இருப்பு 69.54 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.57 அடியாக உள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More