கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழலில், காங்கிரஸ{க்கு ஆதரவாக பிரசாரத்தில் பேசிய சிவ ராஜ்குமார்;, “ராகுல் காந்தியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன். நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்ராவை அவர் மேற்கொண்டார். இந்த யாத்திரையின் மூலம் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று தெரிவித்தார்.சில நாள்களுக்கு முன்னதாக சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா, காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More