Mnadu News

கர்நாடக தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்: முதல் அமைச்சர் பொம்மை ஒப்புதல்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள முதல் அமைச்சர்; பசவராஜ் பொம்மை, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.அதே சமயம், எங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொடமுடியவில்லை. ஆனால், காங்கிரஸ் அதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டது. தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியானதும், தோல்வி நிலவரம் குறித்து முழுமையாக ஆராய்வோம். ஒரு தேசியக் கட்சியாக, நாங்கள் எந்த இடத்தில் பின்தங்கினோம், எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை நாங்கள் எங்கள் பயணத்தின் ஒருபடியாக எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends