Mnadu News

கர்நாடக தேர்தல் பிரசாரம்: ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. தேர்தலில் பிரச்சாரம் செய்ய கர்நாடகா வந்துள்ள பிரியங்கா காந்தி,மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் , காலை உணவாக இட்லி மற்றும் தோசையை சாப்பிட்டார்.அதன் பிறகு அது நன்றாக இருந்ததையடுத்து ஓட்டலின் சமையலறையில் பிரியங்கா காந்தி, தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்று கொண்டார்.பிறகு, ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் சிறிது நேரம் உரையாடினார். அடுத்த முறை வரும்போது தனது மகளையும் அழைத்து வருவேன் என அவர்களிடம் கூறியுள்ளார்.

Share this post with your friends