Mnadu News

கர்நாடக தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரேக்கட்டமாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.அதையடுத்து, வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் சீலிட்டு பத்திரமாக வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சென்றனர்.அங்கு வாக்குபதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.இந்த தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளை அன்றே தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More