தமிழக – கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியுடன் பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து சிலர் பரிசலில் பாலாற்றைக் கடந்து சென்று கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 பரிசல்களில் சென்றவர்கள் கர்நாடக வனப் பகுதி பாலாற்றங்கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத் துறையினர், இவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அருகே காணாமல்போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் மீட்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகின்றது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டதா என விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் செல்லும் போக்குவரத்துக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More