Mnadu News

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரியா தூக்கிலிட்டுள்ளது. உடல் வளர்ச்சி குறைந்த பெண்களை இனம் கண்டு அவர்களின் கர்ப்ப பையை நீக்கவும் வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது.அதோடு,தன்பாலின ஈர்ப்பாளர்களையும்,பிற மதங்களை வழிப்பட்டவர்களையும் வடகொரியா தூக்கிலிட்டுள்ளது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் வடகொரியாவின் தூக்குத் தண்டனை பட்டியலில் குழந்தைகள் இருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.இந்தநிலையில், 2017 முதல் 2022 வரை, வடகொரியாவில் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து, நாட்டிலிருந்து தப்பி ஓடிய 500-க்கும் மேற்பட்ட வடகொரியர்களிடம் இருந்து சாட்சியம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More