சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை. சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.