Mnadu News

கலைஞர் பிறந்தநாளுக்கு தொண்டர்களுக்கு ட்ரீட் – திமுக பொதுச்செயலாளர்

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி திமுக கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்
கூட்டம் நடைபெற உள்ளது. 23 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய 3வது கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக. முன்னதாக திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Share this post with your friends