Mnadu News

கல்யாண வீட்டில் பண மழை: மகிழ்ச்சியில் மக்கள்.

கல்யாணம் நிகழ்ச்சி என்றால் சொந்த பந்தங்கள் ஒன்றுக் கூடி, ஆடல், பாடலுடன் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.வாண வேடிக்கையுடன் அறுசுவை உணவுகள் பரிமாறப்படும். ஆனால் குஜராத்தில் மெஹ்சனா மாவட்டத்தில் அகோல் கிராமத்தின் மாஜி பஞ்சாயத்து தலைவர் கரீம் யாதவ். இவர், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கரீம் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணம் நடந்த இடத்தில் உள்ள மாடிக்கு சென்று பணத்தை வீசி ஏறிந்தனர். ரூ 100 மற்றும் ரூ 500 நோட்டுகளை வீசினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்சியுடன் எடுத்து செல்லும், வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends