Mnadu News

கல்லூரி மாணவியை கடத்திய பிரபல ரவுடி..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த விஜிமோன் என்பவர் அதே ஊரை சேர்ந்த 17- வயதான கல்லூரி மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை விஜிமோன் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி கடத்தலில் ஈடுபட்ட விஜிமோன் மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றனர். விஜிமோன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends