நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், “கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தனர். மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடையை தடுப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரித்தனர்.
நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் பெயரை தெரிவிக்க இணைதளம் உருவாக்கவும், நன்கொடைக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்
அதோடு, நன்கொடைகளுக்கு வருமான வரித்துறையின் வரி விதிப்பு சரி என அதிரடி தீர்ப்பளித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More