ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகை தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் ;தேதி ஆந்திர பிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில், கடந்த 2017-2020- ஆம் ஆண்டுக்கான படிப்பு கட்டண தொகையை ஆண்டுக்கு 24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. எனினும், அரசின் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில்; ஆந்திர பிரதேச அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை , நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷ_ தூலியா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரரித்தது. அப்போது, கட்டண தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் எந்த வகையிலும் நியாயமற்றது என கூறிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கொண்டதுடன், அதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தது. கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல. தற்போது, படிப்பு கட்டணத்திற்கு வசூலாகும் தொகையே நிர்வாகத்திற்கு போதுமானது என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More