பீகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கள்ளச்சாராயம் விற்பனை அமோகமான உள்ள நிலையில், சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பலர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். மதுவிலக்கால் ஏராளமான மக்கள் பலனடைந்துள்ளனர். எனினும், பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறேன்.
ஏழைகளைக் கைது செய்யாதீர்கள். மாறாக, கள்ளச்சாராயத்தை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன். கள்ளச்சாராய தொழிலில் இருப்பவர்கள் வேறு தொழிலுக்கு மாற ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால், அதையும் அரசு பரிசீலிக்கத் தயார். ஆனால், யாரும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபடக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More