Mnadu News

கவனத்தை பறிக்கும் “வரலாறு முக்கியம்” டிரெய்லர்!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பல புதிய இயக்குனர்கள் மற்றும் பல புதிய நடிகர்கள் அறிமுகமாகி வெற்றி நடை போட்டு வருகின்றனர். பிரபல நடிகரும் பிரபல தயாரிப்பாளரின் மகனுமான ஆர் பி சவுத்ரி யின் மகனுமான ஜீவா தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நடித்து வருகிறார். பல வெற்றி தோல்விகளை கண்டு ஒரு நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க ஓடி வருகிறார்.

ஜீவா, காஷ்மீரி பரதேசி, சரண்யா பொன்வண்ணன், மொட்ட ராஜேந்திரன், ராமதாஸ், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர்
நடிப்பில் உருவாகி உள்ளது “வரலாறு முக்கியம்”. சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஷான் ரகுமான் இசையில் மதன் கார்க்கி அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். கமர்ஷியல் ஃபார்முலாவை கொண்ட இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 9 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

டிரெய்லர் லிங்க் : https://youtu.be/mR_v_e52TN0

Share this post with your friends