Mnadu News

கவிநாடு கண்மாய் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களைச் சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரித்தல் விழாவை முன்னிட்டு திருவப்பூர் கவி நாடு கிராமதினர்கள் ஒன்று சேர்ந்து கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியினை சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் எம் எல் ஏ மருத்துவர் வை முத்துராஜா, கோட்டாட்சியர் முருகேசன் தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கினர்.திருச்சி மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 963 காளைகள் பங்கேற்றன 250 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி வாடி வாசலில் திறந்து விடப்பட்ட காளைகளை அடக்கினர் சிறந்த காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்தும் நகரப் பகுதியில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்

Share this post with your friends