இயக்குநர் சுந்தர் சி படங்கள் என்றுமே குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அனைவரும் பார்க்கும் வகையில் முழு நீள கமர்சியல் படமாகவே இருக்கும். சுமார் 25 ஆண்டுகளாக அயராமல் இதை சிறப்பாக செய்து வருகிறார்.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் “காஃபி வித் காதல்” படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு லிட்டில் மாஸ்டரோ யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் யுவன், ஹிப் ஹாப் ஆதி குரலில் பேரரசு வரிகளில் யூடியூப் இல் வைரல் ஆன “தியாகி பாய்ஸ்” வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. ஆண்களை கழட்டி விடும் பெண்கள் குறித்து பாடும் பாடலாக இப்படம் உருவாகி உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/b5qNENNCUIA