பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவடைந்த உடன் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய தேசிய காங்கிரஸைத் தவிர, மாநிலங்கள் அவையில்; பிரதிநிதித்துவம் பெற்றுள்ள மற்ற 11 கட்சிகளும், கறுப்புச் சட்டத்திற்கு அதாவது டெல்லி அரசின் மீதான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளதோடு, மாநிலங்கள் அவையில் அதை எதிர்ப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், தேசியக் கட்சியான காங்கிரஸ், கறுப்புச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை.எனவே, காங்கிரஸின் மௌனம் அதன் உண்மையான நோக்கங்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெரிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More