Mnadu News

காங்கிரஸ் என்றால் ஊழல்- கமிஷன்- தவறான கொள்கை: பாஜக., தேசிய தலைவர் நட்டா சாடல்.

திரிபுராவில் சண்டிர்பசார் பகுதியில் நடந்த பேரணியில், கலந்து கொண்டு பேசியுள்ள பாஜக., தேசிய தலைவர் நட்டா,,கடந்த 9ஆண்டு கால பாஜ., ஆட்சியில் இந்தியா வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டுள்ளது. 2014க்கு முந்தைய காலங்களில், நாம் ஊழல் நிறைந்த நாடாகக் கருதப்பட்டோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ஒவ்வொரு நாளும் ஊழலும் மோசடிகளும் நடந்தன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக., ஆட்சியில் 74 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று வடக்கு கிழக்கு மாநிலங்களில் 7 புதிய விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. அனைத்து தலைநகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. பாஜக., அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. காங்கிரஸ் என்றால் ஊழல், கமிஷன், தவறான கொள்கை என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More