கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. முதல அமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதல் அமைச்சராக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. ஒருகட்டத்தில் கொந்தளித்து போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினர். இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது. ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சச்சின் பைலட் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக தலவல் வெளியாகியுள்ளது. ஜூன் 11ஆம் தேதி, சச்சின் பைலட் தந்தையின் நினைவு தினத்தை ஒட்டி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More