கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், பிஎஃப்ஐ போன்று பஜ்ரங்தளம் அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங்தளம் அமைப்பினர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எரித்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More