காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கேவின் தலைமையால் காங்கிரஸ் உத்வேகமும், பலமும் பெறும் என்று நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. முழு பலத்துடனும், ஒற்றுமையாகவும் அனைத்தையும் எதிர்கொண்டு, முன்னேற்றப்பாதையில் சென்று வெற்றியைப் பெறுவோம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் எனது கடமையை என்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்தேன்; இந்த பொறுப்பில் இருந்து விடுபடுவதை நிம்மதியாக உணர்கிறேன் என்றும் சோனியா காந்தி கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More