கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஷிமோகா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு ஏற்ப கர்நாடக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.அதே சமயம்,நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்தது வலுப்பத்தியது காங்கிரஸ் கட்சிதான். அதன் பலனைத்தான் தற்போது பலரும் அனுபவித்து வருகிறார்கள். நரேந்திர மோடி பிரதமராக ஆக முடிந்ததும் அதனால்தான். இல்லாவிட்டால், அண்டை நாடுகளில் உள்ளதுபோல் இங்கும் சர்வாதிகார ஆட்சிமுறைதான் இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More