காங்கோ நாட்டில் அடிக்கடி நிலச்சரிவு, மழை வெள்ளம் போன்றவைகள் நிகழ்ந்து மக்களை வாட்டி வருகிறது. இதன் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் பல பகுதிகள் மூழ்கிய நிலையில், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், 120 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கால நிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகிய வற்றால் நகரம் தொடர்ந்து கடுமையான சூழலை சந்தித்து வருகிறது.
