Mnadu News

காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி.

பாலஸ்தீனத்தின் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா பகுதியில் உள்ள அகதிகள் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் மேல் தளத்தில் கடந்த வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடியிருப்பு வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலாக காட்சி அளித்தது. இந்த பயங்கர தீ விபத்தி சிக்கி 7 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் கருகி இறந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழுந்துவிட்டு எரியும் கட்டடத்திற்கு வெளியே மக்கள் அலறுவதைக் காண முடிந்தது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெருக்களில் அழுது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின்படி, கட்டடத்திற்குள் அதிக அளவு பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தீ பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கட்டடத்தில் இருந்த அனைவரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends