Mnadu News

காதல் திருமண படுகொலை விவகாரம்! இளம் பெண்ணுக்கு அடி உதை! நால்வர் கும்பல் கைது! 

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி அருகே புளுகன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சங்கர். இவரது மகள் கல்லூரி மாணவியான 20 வயது சரண்யா. இவர், பிப்ரவரியில் தேதி டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளியான, கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான ஜெகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெகனின் பெற்றோர், திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வேலைக்காக ஜெகன் சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி டேம் கூட் ரோடு அருகே அவரை வழிமறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர் இருவர் சேர்ந்து, ஜெகனை சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். 

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். அதன்பின்னர், சரண்யா வாத்தியார் கொட்டாயில் உள்ள கணவர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனிடையே கடந்த 26ம் தேதி மாலை சரண்யாவின் தாய் 35 வயதான ரத்தினம்மாள், 34 வயதான பூமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மங்கா, குமார் ஆகியோர் சரண்யா வீட்டிற்கு சென்று, நீதிமன்ற சாட்சிக்கு ஆஜராக கூடாது என மிரட்டி உள்ளனர். 

இதை ஏற்க மறுத்த சரண்யாவை அந்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து கடந்த 27 ஆம் தேதி மாலை சரண்யா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சரண்யாவின் தாய் ரத்தினம்மாள், உறவினர் பூமணி ஆகியோரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மங்கா மற்றும் குமாரை தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Share this post with your friends