‘காந்தாரா 2’ படத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற CAMPCO ஜூப்ளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, “நான் இப்போதுதான் காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் மூலம் கர்நாடகாவின் வளமான பாரம்பரியம் குறித்து அறிந்துகொண்டேன். பாதகமான சூழ்நிலையிலும் விவசாயம் செய்து நாட்டை செழிக்கச் செய்யும் மக்கள் உள்ள பகுதிகள் நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளன” என்று பேசினார். இந்தத்திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா அண்மையில் கொண்டாப்பட்டது. அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, “ இப்போது வெளியாகியிருப்பது காந்தாரா படத்தின் 2 ஆம் பாகம்தான். கதைப்படி பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். காந்தாரா வின் வரலாறு இன்னும் ஆழமானது.” என்று பேசினார்.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More