Mnadu News

காரின் பேனட்டில் தொற்றிய போலீசை 4 கி.மீ. இழுத்து சென்ற டிரைவர் கைது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் 50 வயதான சிவ் சிங் சவுகான் என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக , டிரைவர் ஒருவர் மொபைல் போன் பேசியபடியே காரை ஓட்டி வந்தவரை, சிவ்சிங் தடுத்து நிறுத்தினார். சாலை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதமும் விதித்தார். ஆனால், அபராதம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த டிரைவர், காரை வேகமாக கிளப்ப முயன்றார். ஆனால், அவரை சிவ் சிங் தடுத்து நிறுத்த முயன்றும் முடியாமல் போனது.
இதனால், அவர் காரின் பேனட்டில் குதித்தார். அப்படியும் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்றார். ஆனால், சிவ்சிங் காரை இறுக பிடித்து கொண்டதால் கீழே விழவில்லை. இதனால், கோபமடைந்த அந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்று திடீரென பிரேக் போடுவது, முன்னாள் சென்ற கார் மீது மோதுவது போல் சென்று நிறுத்துவது என பல முயற்சிகள் செய்தும் டிரைவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு 4 கி.மீ., தூரம் சிவ்சிங்கை காரின் முன்பக்கத்தில் வைத்து டிரைவர் இழுத்து சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வந்து அந்த காரை சுற்றி வளைத்தனர். இதனால், டிரைவர் வேறுவழியின்றி காரை நிறுத்தினார். சிவ்சிங்கும் எந்த காயமுமின்றி தப்பினார். தொடர்ந்து, டிரைவரை கைது செய்த போலீசார், காரை ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஓட்டுதல், அரசு பணியாளருக்கு காயம் ஏற்படுவதை போன்று ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் காரில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவானது. இது தற்போது வெளியாகி உள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More