Mnadu News

கார்கேவுக்கு கொலை மிரட்டல் : விசாரிக்கப்படும்- பசவராஜ் பொம்மை உறுதி.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார்.இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்ள கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, “இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். இதில் அடங்கி இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends