Mnadu News

கார்த்தி – ராஜு முருகன் கூட்டணியில் “ஜப்பான்”! பூஜையுடன் துவக்கம்!

நடிகர் கார்த்தி பாதையில் வெற்றி மேல் வெற்றி தான் என சொல்லவும் அளவுக்கு அவரின் கேரியர் கிராப் உச்ச இடத்தில் தற்போது உள்ளது.  இந்த வருடத்தில் மட்டும் விருமன், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, சர்தார் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்து உள்ளார்.

இதில் பொன்னியின் செல்வன் ₹500 கோடிகளுக்கு மேலும், சர்தார் ₹100 கோடியையும் பெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிகளால் கார்த்தியின் சம்பளம் ₹20 கோடிகள் என சொல்லப்படுகிறது.

பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த ராஜு முருகன் – கார்த்தி கூட்டணி இன்று பூஜையுடன் துவக்கி உள்ளது “ஜப்பான்” படத்தை. அணு இம்மானுவேல், விஜய் மில்டன், சுனில் ஆகியோர் நடிக்கின்றனர்.

சர்தார் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜி வி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். பிஸி ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரிவ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜை வீடியோ லிங்க் : https://youtu.be/DXvC9glJmh8

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More