Mnadu News

கார் குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்:ஜமாத் நிர்வாகிகள் அறிவிப்பு.

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் சென்றனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜமாத் அமைப்பினர், “மத நல்லிணக்க வருகையாக கோட்ட ஈஸ்வரன் கோவிலின் நிர்வாகிகளை சந்தித்து நாங்கள் உரையாடினோம். சென்ற வாரம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு சமூகத்தினிடையே ஏற்பட்ட பதட்டத்தை நாம் அறிவோம். இஸ்லாமியர்களான நாங்கள் ஏழு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் 200 ஆண்டுகளுக்கு மேலாக மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தினை ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மக்கள் ஒற்றுமையோடும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அமைதியானவர்கள். ஆன்மீகவாதிகள். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் எனக் கூறி உள்ளனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More