தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் உருவானது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கதேசத்தில் இருந்து ஆயிரத்து 460 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகவும்,பிறகு அதிதீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு: பதறிப்போன அதிகாரிகள்.
தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம்...
Read More