Mnadu News

காற்று மாசுப்பாட்டில் டெல்லி முதலிடம்! தீபாவளி கொண்டாடியதால் மேலும் மாசு அதிகரிப்பு!

காற்று மாசு நிறைந்த நகரம் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதல் இடம் டெல்லிக்கு தான் தரப்படும். இந்த நிலையில், காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி வெடித்தால் ₹200 அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதிரடி அறிவிக்கை வெளியானது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி, டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியது. இது தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடித்ததால் நிகழ்ந்ததே.

நொய்டாவில் 392 , மதுரா சாலை பகுதியில் 340, டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசர சூழல் டெல்லியில் உருவாகியுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More