ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமதுவரலாறு, நாகரீகம் மற்றும் கலாசாரம் குறித்து நாம் பெருமை கொள்கிறோம். உலகின் பல நாகரீகங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால், எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியவில்லை. இந்தியா ஒரு நிலப்பகுதி மட்டும் அல்ல . நமது நாகரீகம், கலாசாரம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இதனால்தான் இந்தியா தனது எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுகிறது.
காலனி ஆதிக்கத்தில் இருந்து வெளியே வருவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சமுதாயமும் அதிகாரம் பெறுவதுடன் முன்னேற வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். குஜ்ஜார் இன மக்கள் நாட்டிற்காக உழைத்துள்ளனர். பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தால் மக்கள் பலன் பெற்றுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More