Mnadu News

காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்.

கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பின்னர் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியானது. இதனால் மீண்டும் முழுவீச்சில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறும் சூழல் உண்டாகியுள்ளது.
சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends