இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைவதும், அதனை நம் ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. அதேபோல், இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாமல் பறக்கும் ட்ரோன்களை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.நமது உளவுத்துறை தரப்பில் வெளியான செய்திகளின்படி, ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் நசீர் கான் மூலமாக, இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தை பாகிஸ்தான் தீட்டி வருவதாகவும், இதற்காக நிதியுதவி உட்பட ஆயுதங்கள், போதைப்பொருட்களை உலகெங்கிலும் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரோன்களின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More