Mnadu News

காவிரி ஆற்றில் தடுப்பணை: பதிலளிக்க செயலாளருக்கு உத்தரவு.

மதுரையை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் காவிரி ஆறு தலைகாவிரியில் உருவாகி பூம்புகார் கடலில் கலக்கிறது எனவும், இது கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தின் நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக காவிரி படுகைகள் அமைந்துள்ளது. இதில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் சுமார் 2 லட்சத்து 69 ஆயிரம் ஹெக்ட்டர் நிலங்கள் பயனடைவதாகவும், மீதம் உள்ள 6 மாவட்டங்களும் 2 லட்சத்து 20 ஆயிரம்; ஹெக்ட்டர் என்ற அளவில் மட்டும் பயனடைவதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நல்ல பருவ மலை காலங்களில் காவிரி ஆற்றின் நடுவில் தடுப்பணைகள் இல்லாததால் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீரானது வீணாக கடலில் கலந்து வருகிறது எனவும் தெரிவித்திருந்தார். இதற்காக கடந்த 2018- ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு காவிரியின் குறுக்கே கரூர் மாவட்டத்தில் சுமார் 490 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்ட திட்டம் வகுத்ததாகவும், தற்போது வரை அதனை நடைமுறை படுத்தவில்லை எனவும் தனது மனுவை தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் ஒரு குறுகிய பணி இல்லை எனவும், ஆனால் இது ஒரு முக்கிய பிரச்னை எனவும் கூறினார். தொடர்ந்து அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விவரங்கள் குறித்து பதில் அளிக்க பொதுபணிதுறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Share this post with your friends