Mnadu News

காஷ்மீரில் கனமழை :பத்ரிநாத் – கேதார்நாத் யாத்ரீகர்கள் ஸ்ரீநகரில் நிறுத்தம்.

கேதர்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேதர்நாத் கோயில் திறக்கப்பட்டது.அதையடுத்து யாத்ரீகர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காஷ்மீரில் உள்ள பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு மற்றும் கனமழை காரணமாக பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் செல்லும் யாத்ரீகர்கள் ஸ்ரீநகரில் உள்ள கர்வாலில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, வானிலை சீரடையும் வரை யாத்ரீகர்கள் ஸ்ரீநகரிலேயே இருக்கும்மாறு பவுரி மாவட்ட எஸ்எஸ்பி ஸ்வேதா சௌபே அறிவுறுத்தி உள்ளார்.

Share this post with your friends