ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அச்சன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சஞ்சய், உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரது இறுதி சடங்குகள் நடந்தன. இதனை உள்ளூர்வாசிகளான முஸ்லிம்கள் தங்களது சொந்த செலவில் நடத்தினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சமூக நல்லிணக்கம் நீடிப்பதற்காக நீண்டகாலமாகவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More