கிருஷ்ணகிரி அருகே பெரிய கோட்டப் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மகபூப் நகர் பகுதி. அங்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் சீராக வருவதில்லை, உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கப்படவில்லை, சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மேலும் சாக்கடை கால்வாய்கள் பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் கழிவுநீர் ஒடுகிறது.
இந்த நிலையில் புதிய சாலை சாக்கடை கால்வாய் அமைக்க கோரியும் குடி தண்ணீர் மின்விளக்கு சீராக வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்த அப்பகுதி மக்கள் சாலையில் ஓடும் சாக்கடை நீரில் நாத்து நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் அப்படி இல்லை எனில் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.