Mnadu News

கிருஷ்ணா நீர் திறப்பு: ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்.

சென்னையை அடுத்த பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் வீராணம் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் தற்போது 7 ஆயிரத்து 496 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.தற்போது.கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.அதன்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 1-ஆம்; தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More