கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை இரவு முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையில் உள்ளனர்.